மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு- தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது


மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு- தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது
x

பெட்ரோல், டீசல் விலைக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மதிப்பு கூட்டு வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3.25-ம், டீசல் விலை ரூ.2.50-ம் உயர்கின்றன.  

கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு அடைப்பால், அரசுக்கு  வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ள நிலையில், இழப்பை சரி கட்டும் வகையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.   இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கும் வரும் எனத்தெரிகிறது.

ஏற்கனவே, அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி  உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை  உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story