தமிழகத்தில் கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு புதிதாக இல்லாமல் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story