மாவட்ட எல்லையை தாண்டிச் சென்று மது வாங்கினால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை
சென்னையை மாநகர பகுதிகளை சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்கு மது வாங்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாளை மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகர பகுதிகளை சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று மது வாங்க முயற்சித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story