'சத்தியம் வெல்லும் என்பதை நிரூபித்திருக்கிறது' - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் டுவிட்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- “ நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது.
இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி” என்றார்.
Related Tags :
Next Story