தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 13ந்தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 13ந்தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 6 ஆயிரத்து 535 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,824 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சென்னையில் நேற்று 4 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இன்று ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வருகிற 17ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனினும், அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 13ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17ந்தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சியர்கள் வழங்கும் ஆலோசனைகளின்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
Related Tags :
Next Story