கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்- முதல்வர் பழனிசாமி
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து தொழில்துறையினருடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படும். அனைத்து கட்டமைப்புகளையும் திறம்பட உருவாக்கி உள்ளோம். தொழில் துறையினர் விழிப்புணர்வுடன் இருந்து நோய் பரவலை தடுக்க வேண்டும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.101 கோடி அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை மேம்பாட்டுக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது . இயந்திரங்களை பராமரிக்க தொழில் துறைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story