புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “ பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம். சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story