கொரோனா தடுப்பு பணி: வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்டுங்கள் - டாக்டர் ராமதாஸ் யோசனை
கொரோனா தடுப்பு பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்டுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்துவிடாது. கொரோனாவால் மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தப்படியாக சென்னைதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையான 6,750 என்பது, இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அளவைவிட அதிகமாகும். இதனால் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையை தராது; மாறாக சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.
எனவே, இனியும் கொரோனா தடுப்பு பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்டவேண்டும். சென்னையில் வெகுவிரைவில் கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story