கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது-விஜயபாஸ்கர்
கொரோனாவை தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்படும்.
கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இருப்பார்கள். 5.5 லட்சம் கபசுர குடிநீர் பாக்கெட், வைட்டமின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை விரட்ட மக்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.
Related Tags :
Next Story