தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு


தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 20 May 2020 8:23 PM IST (Updated: 20 May 2020 8:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  இதன்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  சென்னை தவிர்த்து செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உள்ளது.  தொடர்ந்து திருவள்ளூரில் 594 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவை தவிர, கடலூர் 420, அரியலூர் 355, கோவை 146, மதுரை 172, நாகை 51, நாமக்கல் 77, நீலகிரி 14, பெரம்பலூர் 139, கரூர் 79, புதுக்கோட்டை 13, ராமநாதபுரம் 39, ராணிப்பேட்டை 84, சேலம் 49, சிவகங்கை 26, தென்காசி 75, தஞ்சை 76, தேனி 92, காஞ்சிபுரம் 223, கன்னியாகுமரி 49, கிருஷ்ணகிரி 21, திருப்பத்தூர் 29, திருவண்ணாமலை 166, திருவாரூர் 32, தூத்துக்குடி 113, நெல்லை 242, திருப்பூர் 114, திருச்சி 68, திண்டுக்கல் 127, ஈரோடு 70, கள்ளக்குறிச்சி 112, தர்மபுரி 5, வேலூர் 34, விழுப்புரம் 318, விருதுநகர் 61 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

Next Story