மாநில செய்திகள்

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி + "||" + Tamil Nadu government grants conditions for shootings

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை

கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும்4- ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டதிலிருந்து சினிமா சார்ந்த பணிகளும் நிறுத்துவைக்கப்பட்டது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை போன்ற சினிமாவை சார்ந்து இருக்கும் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது. உள்ளரங்க படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. 

படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில்  ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும். படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் பங்கற்கலாம்.  போன்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம்
ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் மீதான பதில்களை விரைவாக வழங்குமாறு தமிழக அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டு கொண்டுள்ளது
2. ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு
ஜி எஸ் டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜுன் 30 உடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. மின்சார அளவு கணக்கீடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்கள் இயக்க வாய்ப்பு - ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம்
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரெயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.
5. மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு
வீடுகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ந்தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.