மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு


மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 23 May 2020 1:18 AM IST (Updated: 23 May 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது உம்பன் புயல் உருவாக்கியிருக்கும் சேதங்களைப் பார்க்கும் போது நெஞ்சம் வேதனை அடைகிறது. இந்த மாநிலங்களுக்கு நான் உறுதுணையாக இருப்பதோடு புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story