திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்


திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை  இடைக்கால ஜாமீன்
x
தினத்தந்தி 23 May 2020 10:56 AM IST (Updated: 23 May 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. 

இதுதொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இன்று காலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற  மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். 

தொடர்ந்து,சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story