புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 May 2020 9:05 PM IST (Updated: 24 May 2020 9:05 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் இன்று புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் இதய நோய் மற்றும் சிறுநீரக நோயாளிகள் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களிடம்  பேசிய அவர், புதுச்சேரியில் 27 பேரும், மாஹேவில் 2 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார்.

Next Story