முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் நாளை காலை ஆலோசனை


முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் நாளை காலை ஆலோசனை
x
தினத்தந்தி 25 May 2020 11:00 AM IST (Updated: 25 May 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் நாளை காலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது.  சென்னையில் பெண் உள்பட 6 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது.  தொடர்ந்து பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், மக்களையும் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.  இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வழியே நாளை காலை ஆலோசனை மேற்கொள்கிறார்.  இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.  பரவல் அதிகரித்து வரும் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Next Story