ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு


ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 31 May 2020 5:26 PM IST (Updated: 31 May 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

படிப்பு செலவிற்கு வைத்திருந்த பணத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமிக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும்  தொழில் செய்து வருகிறார். அவரது எட்டாம் வகுப்பு படிக்கும் மகளான நேத்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, மகளின் படிப்பு செலவுக்கு சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அவரது செயலை பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியது,  தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நேத்ரா கூறினார்.

1 More update

Next Story