சென்னையிலும் டாக்சி, ஆட்டோக்கள் ஓட அனுமதி சலூன், அழகு நிலையங்களும் திறப்பு


சென்னையிலும் டாக்சி, ஆட்டோக்கள் ஓட அனுமதி சலூன், அழகு நிலையங்களும் திறப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 4:30 AM IST (Updated: 1 Jun 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்குவதற்கும், சலூன்-அழகு நிலையங்களை திறப்பதற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் மட்டும் தொடர்ந்து தடை இருந்து வந்தது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்களும், சலூன் கடைக்காரர்களும் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கில் சென்னையிலும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளை மட்டுமே கொண்டு மண்டலத்திற்குள் ‘இ-பாஸ்’ இல்லாமல் பயன்படுத்தலாம்.

* ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story