கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்


கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
x
தினத்தந்தி 12 Jun 2020 2:23 PM IST (Updated: 12 Jun 2020 2:23 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. மேலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், பள்ளி தேர்வுகளை ரத்து செய்தன. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது போல, கல்லூரி தேர்வுகள் தொடர்பாக மீம்ஸ்கள் பரவியது 

இந்நிலையில் இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளிக்கையில், “ கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். பல கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை” என்று அவர் தெரிவித்தார். 

Next Story