ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Jun 2020 4:34 PM IST (Updated: 16 Jun 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனியின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 30 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் பழனியின் மனைவி, மகள், மாமியார், மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story