மாநில செய்திகள்

முழு ஊரடங்கையொட்டி கடுமையான நடவடிக்கைகள் தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை + "||" + Police alert motorists to confiscate vehicles without serious action over full curfew

முழு ஊரடங்கையொட்டி கடுமையான நடவடிக்கைகள் தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

முழு ஊரடங்கையொட்டி கடுமையான நடவடிக்கைகள் தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
முழு ஊரடங்கையொட்டி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்து உள்ளனர்.
சென்னை,

சென்னை பெருநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 19-ந்தேதி அதிகாலை முதல் 30-ந்தேதி இரவு 12 மணி வரையில் 12 நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்சு மற்றும் அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்சி உபயோகம் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து உரிய அடையாள அட்டைகளை பெற்று வாகனங்களில் செல்ல வேண்டும். இந்த ஊரடங்கின் போது சரக்கு வாகன போக்குவரத்துக்கும், தண்ணீர், பால், பெட்ரோல், கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் நிறுவனத்திடம் இருந்து உரிய அடையாள அட்டை, அனுமதிச்சீட்டு மற்றும் உரிய ஆவணங்களை பெற்று வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.


வங்கி பணிகள்

20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் சார்ந்த வாகனங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் தங்களது வங்கியின் அடையாள அட்டையை காண்பித்து வாகனங்களில் செல்ல வேண்டும். 21 மற்றும் 28 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான வாகன போக்குவரத்துக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சிகள் உபயோகம் அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களும், அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் அதனை ‘ஏ 5’ அளவு தாளில் பிரதி(ஜெராக்ஸ்) எடுத்து வைத்திருக்க வேண்டும். விமானம் மற்றும் ரெயில் பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை வைத்திருக்க வேண்டும். எந்தவிதமான அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று போலியான அனுமதிச்சீட்டுகளை வைத்து வாகனங்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கி இருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும். இவர்கள் அரசின் இ-பாஸ் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள். 044-23452330, 23452362 அல்லது 90031-30103 என்ற எண்களை தொடர்புக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
2. வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை
வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
பணகுடியில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. விளையாட செல்போன் கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
விளையாட தனது அண்ணன் செல்போன் கொடுக்காததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடை மும்பை ஐகோர்ட்டு உத்தரவால் நீக்கப்பட்டுள்ளது.