தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 56 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர அதிகபட்சமாக மதுரையில் 157 பேருக்கும், திருவண்ணாமலையில் 139 பேருக்கும், கடலூரில் 63 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 37 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 1,358 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து விடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 34,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 27,178 பேருக்கு தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story