தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்  - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 1 July 2020 12:36 PM IST (Updated: 1 July 2020 12:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்.  12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது.  முதல்வரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்” என்றார்.

Next Story