துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிறந்தநாள் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடுவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உங்களது 71-வது பிறந்தநாள், அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு பெருமைப்படும் தினமாக உள்ளது. உங்களுக்கு கிடைத்துள்ள உயர் பதவி, புத்திசாலித்தனம் மற்றும் அறிவு நிறைந்த சிறந்த நாடாளுமன்றவாதியான உங்களை அலங்கரிப்பதாக அமைந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழக மக்கள், அ.தி.மு.க. கட்சி மற்றும் எனது சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேசத்துக்கு உங்கள் சேவை தொடர வேண்டும் என்றும் உங்கள் முன்னேற்றத்துக்காகவும் பிரார்த்திக்கும் லட்சக்கணக்கான நலம் விரும்பிகளில் ஒருவராக இருந்து உங்களை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story