மாநில செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை + "||" + Chathankulam incident: Tuticorin police officers advise

சாத்தான்குளம் சம்பவம்: தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

சாத்தான்குளம் சம்பவம்: தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,

தென்மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) எஸ்.முருகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டியில், “லாக்கப் டெத்தைத் தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 1990- களில் நடந்தது போன்ற சாதிய மோதல் தற்போது தென் மாவட்டங்களில் இல்லை. தந்தை.மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு தேவையான பாதுகாப்புத் தரப்பட்டுள்ளது. தேவையான உதவியும் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட போலீசார், 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அரசு விதிப்படி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினருக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார். 

இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளியும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். மேலும் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட எஸ்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்.  மேலும் நெல்லை, மதுரை, திண்டுக்கல் டி.ஜ.ஜி.க்களும் பங்கேற்றுள்ளனர்.  

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 4 போலீசார் கைதாகி உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதித்த 13,848 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 5,205 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 205 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
3. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கினர் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கால் நேற்று மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
4. நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு
நெல்லை, தூத்துக்குடியில் நேற்று புதிதாக 698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
5. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது பெண்கள் உள்பட மேலும் 3 பேர் பலி
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பெண்கள் உள்பட மேலும் 3 பேர் பலியானார்கள்.