சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு: கைதான 3 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, கைதான 3 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி,
தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசார் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு சிபிசிஜடி போலீசார். அழைத்துச் சென்றனர்.
அங்கு தந்தை மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்குப் பின் கைதானவர்கள் நீதிமன்றம் அழைத்துச்செல்லப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story