தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்


தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 2 July 2020 2:46 PM GMT (Updated: 2 July 2020 2:46 PM GMT)

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264ல் இருந்து 1,321 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 3,095 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது. 41,047 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 33,488 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 35 ஆயிரத்து 692 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,598 ஆக உள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-








Next Story