தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1450 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,214 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 44,956 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 36,164 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13 லட்சத்து 06 ஆயிரத்து 884 ஆக உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டி இருந்தநிலையில், இன்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 66,538 ஆக உள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
Related Tags :
Next Story