கொரோனா அறிகுறி இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும் - சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன்
கொரோனா அறிகுறி இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊர்டங்கு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அதனை மறைக்காமல் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும் அன அவர் குறிப்பிட்டார். மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக கடைபிடித்து, வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கொரோனா நுண்கிருமி தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story