தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்


தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 5 July 2020 7:09 PM IST (Updated: 5 July 2020 7:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 17 பேரும் அடங்குவர். இதன்மூலம் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62,778 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 48,860 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 34,831 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 68,254 ஆக உள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-









Next Story