மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்,
மதுரை,
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன.
மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகின்ற 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்னன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலர் மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Related Tags :
Next Story