சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை


சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 July 2020 3:55 PM IST (Updated: 6 July 2020 3:55 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி,


சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த காவலர்கள் அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தட்டார்மடம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் பியூலா மற்றும் காவலர் தாமஸ் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்கள். இதனையடுத்து மேலும் 6 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், மேற்கொண்டு சில காவலர்கள் மற்றும் அன்று காவல்நிலையத்தில் இருந்த கொரோனா தடுப்பு பணி தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story