திருச்சியில் குப்பை கொட்ட சென்ற 9ம் வகுப்பு மாணவி உடல் கருகிய நிலையில் மீட்பு
திருச்சியில் குப்பை கொட்ட சென்ற 9ம் வகுப்பு மாணவி உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி,
திருச்சி அதவத்தூர் அருகே 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தனது வீட்டருகே குப்பை கொட்ட சென்றுள்ளார். அதன்பின் அவரை காணவில்லை.
இதனால் அவரை பெற்றோர் தேடியுள்ளனர். இதில், மாணவி உடல் முழுவதும் கருகிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் எரிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி சம்பவ இடத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா விசாரணை மேற்கொண்டுள்ளார். திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் குப்பை கொட்ட சென்று உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story