மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4640 ஆக இருந்தது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 1,111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,821 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 200 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story