விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்


விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 8 July 2020 5:06 PM IST (Updated: 8 July 2020 5:06 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்து கடிதம் அளித்தார்.

தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Next Story