இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானதையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள் பலர் இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது;-
“ஓ.பி.சி. கிரமிலேயர் வகைப்படுத்தும் வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது. கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு கிரிமிலேயர் வரம்பிற்கு புதிய சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்.
ஓ.பி.சி. பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு தொடர்பான புதிய மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும். வருமானத்தை கணக்கிடும் போது பெற்றோர்களின் ஊதியம், விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது.
பெற்றோர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஓ.பி.சி கிரமி லேயர் கணக்கிட வேண்டும். பெற்றோர்களின் வருமானம், விவசாய வருமானத்தை சேர்த்து கணக்கிட்டால் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது போய்விடும். ஆகையால் ஓ.பி.சி. பிரிவினருக்கு கிரிமிலேயர் வரம்பை ஏற்கனவே உள்ள நடைமுறை விதிகளின் படியே கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story