மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று


மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 July 2020 9:18 AM IST (Updated: 9 July 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில்  புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. தற்போது வரை 3,811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

* வேலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,494 ஆக அதிகரித்துள்ளது. 

* புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 186 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில்மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 1,029 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 448 பேர் குணமடைந்துள்ள நிலையில், 575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; இதுவரை 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Next Story