"தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை - டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்"-அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை - டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்-அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
x
தினத்தந்தி 9 July 2020 10:16 AM IST (Updated: 9 July 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி இல்லை எனவும் டிவி மூலமே பாடம் கற்பிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆன்லைனில் வகுப்புகளை தனியார் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்கள் தொடங்கி விட்டன. இதன் தொடர்ச்சியாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான திட்டத்தை வரும் 13 ஆம் தேதி முதல் அமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  ஆன்லைன் வழி கல்வி இல்லை எனவும் டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டி அளித்த செங்கோட்டையன், “ஆன்லைன் வகுப்புகள் என்று சொன்னது கல்வி தொலைக்காட்சி சேனல் வழியாக நடத்தப்படுவது ஆகும். கல்வி தொலைக்காட்சி மட்டும் அல்லது, தந்தி, பாலிமர், புதிய தலைமுறை மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளிலும் வகுப்புகள் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தினமும் சில குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான பாடங்கள் அதன்மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறோம். பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் இருப்பதால், அவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் பதிவிறக்கம் செய்து வழங்கப்படும். கேள்வி கேட்பது மட்டும் வாரத்துக்கு ஒரு முறை நடக்கும். இதற்கான கால அட்டவணை தயாராகி வருகிறது. இந்த திட்டத்தைதான் வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.


Next Story