பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுலை10) எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுலை10)  எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 10 July 2020 1:54 AM GMT (Updated: 10 July 2020 1:54 AM GMT)

பெட்ரோல் விலை 12-வது நாளாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக் கொள்கின்றன. கொரோனா ஊரடங்கால் எரிபொருள் தேவை கணிசமாகக் குறைந்ததால், ஆரம்ப கட்ட ஊரடங்கின் போது விலை ஏற்றம் இதுவும் இன்றி இருந்தது.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரத்தொடங்கியது.  சென்னையில் கடந்த ஜூன் 29ம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கு விற்பனையானது.  அதன்பிறகு பெட்ரோல் விலை இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை.எனினும், டீசல் விலை மட்டும்  கடந்த சில தினங்களுக்கு முன் 19 காசுகள் உயர்த்தபட்டு ரூ.77.91-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை.  பெட்ரோல் விலை தொடர்ந்து 12-வது நாளாக மாற்றம் இன்றி விற்பனையாகிறது. டீசல் விலையில், 4- ஆம் நாளாக மாற்றம் இல்லை.  இன்று, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.77.91-க்கும் விற்பனையாகிறது.

Next Story