மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு


மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 10:26 AM IST (Updated: 10 July 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவ ஆரம்பித்துள்ளது. 

மாவட்டத்தில் நேற்று வரை 5,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உள்ள நிலையில் 4,001 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை மாவட்டத்தில் 95 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story