செங்கல்பட்டு, தேனி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு, தேனி மாவட்டங்களில் இன்று மேலும் 100 க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 7,386 ஆக இருந்தது. மேலும் தேனி மாவட்டத்திலும் நேற்று வரை கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,339 ஆக இருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7600ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 4199 பேர் குணமடைந்துள்ளனர். 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 3,041 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
* இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தேனி மாவட்டம் போடியில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story