தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 10 July 2020 7:25 PM IST (Updated: 10 July 2020 7:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 2,869 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்திலின்று 242 பேருக்கும், திருவள்ளூரில் 219 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 61 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 192 பேருக்கும், வேலூரில் 140 பேருக்கும், தூத்துக்குடியில் 195 பேருக்கும், திருநெல்வேலியில் 145 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,105 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 37,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 15,29,092 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story