மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு
மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து இன்று காலை நிலவரப்படி மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,077-ஆக உள்ளது.
இந்நிலையில் மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,மதுரையில் முழு பொதுமுடக்கமானது, மேலும் 2 நாட்கள்(ஜூலை 14 தேதி வரை) நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும், திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 14 தேதி வரை நள்ளிரவு வரை முழு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story