ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை
ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று, கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆய்வுக்கு உட்படாமல் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப் பிலான திட்டங்களை நிறைவேற்றுவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் தேவையற்றது. இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகம் நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு சகஜநிலை திரும்பிய பிறகு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாகும். எந்த நிலை யிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையாக இருப்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல. எனவே இன்றைய சூழலில் ரூ.12 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து, அந்த நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story