பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கவில்லை-தமிழக அரசு விளக்கம்


பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கவில்லை-தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 14 July 2020 4:25 PM IST (Updated: 14 July 2020 4:25 PM IST)
t-max-icont-min-icon

பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மதுரை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில், மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி பாரசிட்டமால் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜோயல் சுகுமார் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரானையின் போது, பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மனுவை முடித்து வைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Next Story