தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு


தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 14 July 2020 4:55 PM IST (Updated: 14 July 2020 4:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என்று  தமிழக அரசு தெற்கு ரெயில்வேயிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று   15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் 31ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சி- மயிலாடுதுறை, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோயில் ஆகிய நகரங்களுக்கான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாகவும்  தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து, ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

Next Story