மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல் + "||" + Tn Cabinet approve 7.5 percent reservation in Medical Students

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  உள் ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் , முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,  தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள்  ஆகியவை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,  மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ரூ.5 ஆயிரம் கோடியில் முதலீடு செய்யும் 6 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2. ‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்?எடப்பாடி பழனிசாமி ஆவேசம்; காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்
‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்? என்று சட்டசபையில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
3. நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
4. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என அறிவிப்பு
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...