திமுகவின் கொள்கைகள் யாருடைய மனதையும் புண்படுத்துவது இல்லை- கே.என்.நேரு அறிக்கை


திமுகவின் கொள்கைகள் யாருடைய மனதையும் புண்படுத்துவது இல்லை- கே.என்.நேரு அறிக்கை
x
தினத்தந்தி 15 July 2020 3:22 PM IST (Updated: 15 July 2020 3:22 PM IST)
t-max-icont-min-icon

திமுகவின் கொள்கைகள் யாருடைய மனதையும் புண்படுத்துவது இல்லை என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு  வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இணையதளத்தில் வரும் விமர்சனங்களில்,  திமுகவை கோர்த்து விடும் போக்கை ஒரு உத்தியாக சிலர் திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்று  குறை கூறி உள்ளார்  'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று சொன்னவர் அண்ணா  என்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் , ஆன்மீகப் பிரச்சாரத்துக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது' என்று வழிகாட்டியவர்  கருணாநிதி என்றும்  நேரு குறிப்பிட்டுள்ளார் ..

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான ஒரு இணையதளக் காட்சிக்குப் பின்னணியில் தி.மு.க.,வினர் இருப்பது போன்ற தோற்றத்தைச் சில  அரசியல் அரைகுறைகள் பரப்பி  வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

திமுகவிற்கு என தனித்த  வெளிப்படையான கொள்கைகள் உண்டு என்றும் யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை, யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். இத்தகைய அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பும் தீயசக்திகளை இணையதளங்களில் இயங்கும் தி.மு.க.வினர் அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story