மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு + "||" + Sathankulam Murder case: 15 Judicial custody for 5 cops who arrested

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான போலீசார் 4 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 நாட்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்களிடம்  தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

5 போலீசாரின் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, போலீசார் 4 பேருக்கு மேலும் 15 நாட்கள் அதாவது ஜூலை 30 ஆம் தேதி வரை  நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.  காவலர் முத்துராஜ்-க்கு மட்டும் மேலும் 1 நாள் சிபிஐ காவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 4-வது நாளாக விசாரணை நடத்த சிபிஐ திட்டம்
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியாவிடம் 4-வது நாளாக விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
3. சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு
சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
4. சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா? மராட்டிய உள்துறை மந்திரி பதில்
ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நெல்லை விருந்தினர் மாளிகையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.