சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 17 July 2020 7:03 PM IST (Updated: 17 July 2020 7:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. சென்னையை உலுக்கிய கொரோனா தற்போது தமிழகத்தில் வெளி மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  4,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதில், 4,463 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 75 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 18 லட்சத்து 31 ஆயிரத்து 304 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும்  கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 3,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 79 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,782 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட தகவல் உள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 262 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 220 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணும் பட்டியலில் காணலாம்.

Next Story