இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 July 2020 2:38 PM IST (Updated: 20 July 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பும் வெளிவர வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதாகவும் இரண்டு வாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Next Story